valeeswaran

உயரப் பறக்கும்
பிணம் தின்னா
வானத்து வேங்கை
மிக உயர்ந்தே
தனித்தே மறைந்தே
கட்டும் கூடு; போல்

உனது
எண்ணங்களும்
நோக்கங்களும்
தனித்துவமாகவும்
உயர்ந்ததாகவும்
இருக்கும் போது

உனை
வீழ்த்த யார் உண்டு
இப்பரணியிலே!